சிதம்பரம் தில்லை நடராஜனுக்கு,தங்கத்தால்
கூரை அமைத்து தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதி வைத்து, தில்லையை எல்லை எங்கும் மணக்கச் செய்தவன் ஒரு யாதவன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆனால் உண்மைதான். ஆம்! அந்த யாதவனின் உண்மைப் பெயர் மணவில் கூத்தன் காலிங்கராயன் என்பதாகும்.
தொண்டை மண்டலத்து 24 கோட்டைகளில் ஒன்றான மணவில் எனும் ஊரின் தலைவன் குலோத்துங்கனுடைய படைத்தலைவனாக இருந்து பாண்டிய நாடு, வேணாடு, மலைநாடு, முதலிய நாடுகளோடு போர் நடத்தி புகழ்பெற்றவன்.
இந்த யாதவனால் சோழ மன்னன்க்குப் பெரும் புகழ் உண்டாகியது. இவனுக்கு ‘காலிங்கராயன்’ என்னும் பெயர் சூட்டிச் சிறப்பித்தனர். பாண்டிய நாட்டில் இவன் வாழ்ந்த போது தான் தன் இனத்தைச் சேர்ந்த மாதரிக்கு இடைச்சி அம்மன் என்ற பெயரிலேயே மதுரையில் ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது வரலாறு
(ஆதாரம்: ‘குமுதம்’ பக்தி ஸ்பெஷல்-தகவல் திசைமுத்து)