Friday 13 June 2014

ஆயர் குல வள்ளல் பேகன்


 பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்:
 
 

வேள் - பேகன்.

இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன் (ஆ+இனம்+குடி =>ஆவினன் குடி =>ஆயர் குடி ); இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

" அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
  உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
  வரையா மரபின் மாரி போலக்
  கடாஅ யானைக் கழற்காற் பேகன்
  கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

" உடாஅ போரா ஆகுத லறிந்தும்
  படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
  கடாஅ யானைக் கலிமான் பேக!"

எனப் பரணரும் (புறம்-141)

5 comments:

  1. மிக அரும்மையாக உள்ளது உங்கள் தகவல், நன்றி

    ReplyDelete
  2. இந்த பணி தொடர வாழ்த்துக்கள்
    http://tamilkonar.blogspot.in

    ReplyDelete
  3. மிக அரும்மையாக உள்ளது உங்கள் தகவல், நன்றி

    ReplyDelete
  4. யாதவர் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு. இனி வரும் தலைமுறையினர் வரலாற்றை தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல முயற்சி,,மிக்க நன்றி

    ReplyDelete
  5. கடைச்சங்க காலத்தில் ஆயர்குடி மக்கள் மேல் தட்டுக்கு செல்ல முடியாமல் வெளி தேச மக்களால் பின்னுக்கு தள்ளப்பட்டனர் என்பது வரலாறு கண்டால் புரியும்.அதில் பிற புலவர்களால் ஆயர்குலம் என்ற சொல்லை தவிர்த்து இடை,எது ,யாது என சொல்லை பயன்படுத்தி இடையர்,யாதவர்,யவனர் மாற்றினர்.ஆதி குலம் ஆயர்குலம் என்பதனை அழிக்க இப்போது விக்கிபிடியா முயல்கிறது.ஏன் என்றால் 'ஆயி' என்ற குடி ஆயர்கள் என்பதன் ஆணி வேர் இந்த சொல் உலகம் முழுவதும் பரவி உள்ளது இதனை நாம் பயன் படுத்தினால் மிகவும் பெரிய சமுதாயமாக ஆயர்குலம் வளரும்.

    ReplyDelete