Friday 13 June 2014

கோச்சடையான் ரணதீரன்

நண்பர்களே , சமீபகாலமாகவே சினிமாத்துறையிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி கொண்டிருக்கும் திரைப்படம் கோச்சடையான் ! சரி திரைப்படம் ஒரு புறம் இருக்கட்டும் , யார் இந்த கோச்சடையான் ? ஆவல் கொண்டு தேடியதில் எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் . எனது பதிவில் கூறவிருக்கும் தகவளோடு உங்களுக்கு மாற்றுகருத்து இருப்பினும் தெரியபடுத்தலாம்.. சரி வாருங்கள் கோச்சடையானை பற்றி காண்போம் ....

கோச்சடையான் பாண்டிய மன்னர்களுள் ஓர் தலைச்சிறந்த மாவீரன் ஆவார் , இவர் திபி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர், வீரத்திற்கு பெயர் பெற்றவர். இவர் திபி 670 முதல் திபி 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தார்.

தனது தந்தையின் மறைவிற்கு பிறகு அரியணையில் அமர்ந்தார் , இவர் பொறுப்பேற்கும் போது பாண்டிய நாடு சற்று சிறப்பற்றே இருந்தது , அதன் பின்னேர் இவர் மேற்கொண்ட போர்களினாலும் வெற்றிகளினாலும் பாண்டியநாடு முன் எப்போதும் இல்லா அளவிற்கு பெரும் புகழும் பெற்றது , ராஜிய எல்லைகளும் விரிவடைந்தது. மேலும் கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.


அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார். பெரும் படையும் சேர நாட்டில் பிரவேசித்தார், எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும் முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன் பாண்டிய நாடு திரும்பி, நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான்.

இம்மன்னனுக்கு ரணதீரன் கோச்சடையன், செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.




இவர் தன்னை சந்திர வம்ச யாதவ குலம் எனவும் தனது தானப் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளார் ...

முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான்.

No comments:

Post a Comment