மகாபாரத கிருஷ்ணனின் தந்தை பெயர், வாசுதேவன் அல்லது வசுதேவர் என்பதை
எல்லோரும் அறிவர். அனால் வசுதேவருடைய சகோதரர்கள் , எதனை பேர் என்பதை
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் எண்ணற்ற பேருக்கு இது தெரியாது என்பதால்
அச்சகோதரர்களின் பெயரை இங்கே தருவது பொருத்தமாகும்.
1.வாசுதேவன் 2.பாலதேவன் 3.கண்டதேவன் 4.சூரியதேவன் 5.அக்கிதேவன் 6.வருணதேவன் 7.அஜ்ஜனா 8.பஜ்ஜனா 9.கட்ட பண்டிதா 10.அக்கூனா, 11.அன்ஜனா(பெண்) இதனை ஆராயும்போது மகாபாரத காலத்துக்கு முன்பே தேவன் தேவர் என்ற பெயரில் யாதவர்கள் அழைக்கபட்டார்கள் என்பது தெளிவு. தேவன் என்பது கடவுளை குறிக்கும் சொல் வடமொழியில் தேவ் என்றால், தமிழில், கோன் என பொருள்படும். கிரி என்றால் கோட்டை என்று தமிழில் அர்த்தம். எனவே தேவ் + கிரி = தேவகிரி என்றால் தமிழில் கோனார் கோட்டை என்பது பொருள். இப்பெயர் பெற்ற கோட்டை ஒன்று மராத்திய மாநிலம் ஒவ்ரங்கப்பாதிளுள்ளது. அதனை உருவாக்கியவர்களும் ஆட்சி செய்தவர்களும் யாதவர்களே.
தேவ் + ஸ்தானம் = தேவஸ்தானம் என்பது கோவிலைக்குறிக்கும் இது கன்னடமொழியில் தேவ் + கட் = தேவ்கட் என்றால் மராட்டிய மொழியில் கோட்டை என்று பொருள். இது தமிழில் கோனார் கோட்டை என்று பொருள் தரும். அதாவது தேவ் என்றால் கோன் கட் என்றால் கோட்டை இரண்டும் சேர்ந்தால் கோனார் கோட்டை என்று அறியலாம். இந்த தேவ்கட் கோட்டை மும்பை-கோவா சாலையில் சாவந்தவாடி என்ற ஊருக்கு அருகிலுள்ளது. தமிழகத்தில் கோனார் கோட்டை புதூர் என்ற ஒரு ஊர் கோவில்பட்டிக்கு அருகில் அழகு முத்து வாழ்ந்த கட்டலான்குளம் அருகேயும் உள்ளது. எனவே தேவ் தேவன் என்ற சொற்கள் யாதவர்களையும் குறிக்கும் என்பது தெளிவு.
இனி தேவன் தேவர் என்ற யாதவ குல வீரர்களில் ஒரு சிலரை மட்டும் இங்கே தருகிறேன்.கி.பி 1247ல் எழுச்சி பெற்ற தேவகிரி யாதவ வீரர்கள் சிங்கண்ணன், கிருஷ்ணமகாதேவன் ,ராமச்சந்திரதேவ், சங்கரதேவன், அரிபாலதேவர் ஆகியோர் ஆவர்.
யாதவ குல முதலாம் வல்லாளதேவன்:
இவர் வினாதித்தியனின் முதல் பேரர் எரியங்கனின் முதல் மகன். இவருக்கு இரண்டு சகோதரர். இளையவர் பிட்டிதேவன், கடைசி சகோதரர் யுதயாதித்தன் இவனது சிறப்பு பெயர், விஷ்ணுவர்தணன். இம்மூவரில் மூத்தவருக்கு வாரிசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1120ல் தமிழகத்தின் பெரும்பகுதியை இந்த யாதவர் ஆண்டனர். பாண்டியரை தோற்கடித்து மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்பது வரலாறு (கி.பி.1141ல் விஷ்ணுவர்தனர் காலமானார் ). இரண்டாம் வல்லாளதேவன் இவர் 47 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவர் நூளம்பவடியில் ஆட்சி புரிந்து வந்த பாண்டிய மன்னருடன் கி.பி.1116ல் போர் தொடுத்தார் இப்படி பல போர்களில் வெற்றி பெற்று வழி வழியாக இவர்கள் 1220 வரை ஆட்சி செய்தனர் இந்த யாதவ வம்சத்தின் கடைசி அரசர் மூன்றானம் வல்லாலத்தேவன் இவரது ஆட்சி காலம் கி.பி.1291-1342 இவர்கள் துவாரசமுத்திரம் , பேலூர் , சோமநாதபுரம் போன்ற இடங்களில் பல கோவில்களை கட்டியுள்ளனர். இக்கோவில்கள் இவ்வம்சத்தின் பொக்கிசங்களாகும்.
நன்றி,
s.p.s.சுபாஷ் சேர்வை யாதவ்

No comments:
Post a Comment