Saturday, 1 March 2014

புதுக்கோட்டை அரசர் பொப்பண்ணக் காங்கேயர் கோன்:



யாதவ மன்னர்கள் பலரின் வரலாறு மறைக்கப் பெற்றுள்ளது. அதே போன்று பலருடைய வரலாறு வெளிக்கொணராமலே உள்ளன. இவ்வாறு வெளிவராமல் இருந்த வரலாற்றில் ஒன்று தான் 2000 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையை ஆண்ட பொப்பண்ணக் காங்கேயர் கோன் ஆகும்.
பொப்பண்ணக் காங்கேயர் கோனின் கோட்டை, புதுகோட்டை அருகே கலசமங்கலம், சிங்கமங்கலம் ஆகிய இரு ஊர்களையும் இணைத்து புதுக்கோட்டை அரசர்களால் ஏறத்தாழ கிபி.1250 இல் இரண்டரை மைல் சுற்றளவுக்கு கட்டப்பட்டதே புதுக்கோட்டையும், கொத்தளங்களும். ஆனால் இன்று கோட்டையின் சுவடுகள் இல்லை. எனினும் பழைய கோட்டையின் சுவடுகளைப் புதுக்கோட்டை நகரத்துக் கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ஏறத்தாழ 50 ஏக்கர் பரப்பளவில் அடி உயர மேடாகக் காணப்படுகிறது. பொப்பண்ணக்கோன் கோட்டைக்கு வெளியே கிழக்கிலும், மேற்கிலும் இரண்டு முனிஸ்வரன் கோவில்களும், தெற்கே அய்யனார் கோவிலும், வடக்கே காளி கோயிலும் உள்ளன. இந்த நான்கு கோயில்களும் அந்த கோட்டையின் காவல் தெய்வங்களாகும். சிலப்பதிகாரத்திற்கு ...உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தாம் உரை எழுத அடிப்படைக் காரணம்.

“கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ணக் காங்கேயர் கோன் அளித்த சோற்றுச் செருக்கு அல்லவோ தமிழ் மூன்றும் உரைவித்ததே”
 
என்று கூறுவதிலிருந்து அடியார்க்கு நல்லாரை ஆதரித்த வள்ளல் பொப்பண்ணக் கோன் எனத் தெரிய வருகிறது.


“தமிழகத்தில் சங்க கால மன்னர் கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் பெருமளவில் அழியாமல் உள்ள ஒரே இடம் பொப்பண்ண கோட்டை எனலாம்”
 
என்று குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். எனவே யாதவ மன்னர்களின் வரலாற்றைப் பறைசாற்றும் பொருட்டுத் தற்போதாவது சமுதாய நலனில் அக்கறை உள்ள கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டால் பல குறுநில மன்னர்களின் வரலாற்றை வெளிக்கொணரலாம்.          

நன்றி,
அடைக்கலம், தஞ்சை

1 comment:

  1. ஐயா இது உண்மையில் நடந்த வரலாறு ஆனால் வலைதளங்களில் கள்ளர் குல அரசராக பதிவுசெய்து உள்ளனரே

    ReplyDelete