Saturday 1 March 2014

மைசூரை ஆண்ட உடையார் என்னும் பட்டம் கொண்ட யாதவர்கள்


இந்த அரசை தோற்றுவித்த பெருமை யாதவ குல இரு சகோதரர்களையே சேரும் மூத்தவன் பெயர் யதுராஜா இளையவன் பெயர் கிருஷ்ணராஜா இவர்களின் தந்தையின் பெயர் ராஜதேவன் இவர்கள் கி.பி. 1399ம் ஆண்டு மைசூரை உருவாக...்கி இந்த வழிவந்த யாதவர்கள் உடையார் வாடியார் என்ற பட்டத்துடன் நமது நாடு சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்தனர். மைசூர் மகாராஜா பேலஸ் கட்டியதும் இந்த யாதவர்களே

தமிழகத்திலும் உடையார் என்ற பட்டத்துடன் யாதவர்கள் வாழ்கின்றனர். இவ்வமசதின் கடைசி மன்னன் ஜெயசாம்ராஜ் வடியார்.இவர் தமிழகத்தின் கவர்னராகவும் இருந்தார். அப்பொழுது மைசூர் என்பது எருமை நாடு என்று அழைக்கப்பட்டது. தமிழகம் கர்நாடக போன்ற எல்லை பிரிவுகள் அக்காலத்தில் இல்லை. மைசூர் என்ற எருமை நாடு அக்காலத்தில் தமிழகத்தில் இருந்தது.இதனை இருங்கோவேள் என்ற யாதவ மன்னன் ஆண்டான். சங்க கால மன்னன் முல்லைக்கு தேர் கொடுத்த பாரி தன் மகளிரை இருந்கோவேளுக்கு மணம் முடிக்க கபிலரிடம் கூறினான். ஏனென்றால் இருவரும் ஒரே இனம்.



கி.பி 1399 ஆம் ஆண்டிலிருந்து யது ராஜ வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய பிரதிநிதிகளாக மைசூரை ஆள ஆரம்பித்தனர். யாதவ வம்சத்தின் வழி வந்தவர்களாக கருதப்பட்ட யது ராஜ வம்சத்தினர் பின்னர் காலப்போக்கில் உடையார் ராஜ வம்சம் என்று அழைக்கப்பட்டனர். பெட்டடா சாமராஜ உடையார் மைசூர் கோட்டையை புதுப்பித்து அதை தன் தலைமையகமாக வைத்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம் ஆன்டு தன் அரசின் தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.

1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆண்டனர். அதன் பின்னர் மைசூர் திரும்பவும் உடையார்களின் தலைநகரமாக மாறியது. 1895 ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நான்காம் கிருஷ்ணராஜ வாடியார் தன் ஒப்பற்ற திட்டங்களின் மூலம் மைசூர் நகரத்தை அழகு மிகுந்த நகரமாக மாற்றினார். மைசூர் மாநகரம் அகலமான சாலைகளும், பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான மாளிகைகளும் கொண்ட அழகு நகரமாக இவர் காலத்தில் மாறியது.

ஆதாரம்: Medous Taylor Historical and Descripts Memorer

No comments:

Post a Comment