Saturday, 1 March 2014

வேளிர்கள் கடையெழு வள்ளல்கள் கிருஷ்ணரின் வழி வந்த யாதவர்கள்


 
வேளிர்கள் கடையெழு வள்ளல்கள் கிருஷ்ணரின் வழி வந்த யாதவர்கள்

சிறுபாணாற்றுப்படை காட்டும் தொகுப்பு

பேகன் - மயிலுக்குப் போர்வை அளித்தவன்
பாரி - முல்லைக்குத் தேர் தந்தவன்
காரி - ஈர நன்மொழி கூறியவன் (councilman)
ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் சொல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன்
அதிகன் - நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன்
நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். (நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்ய
ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.

பெருஞ்சித்திரனார் பாடல் புறநானூறு 158 காட்டும் தொகுப்பு

பாரி - பறம்பிற் கோமான் (பரம்புமலை அரசன், மூவேந்தரோடு போரிட்டவன்)
ஓரி - கொல்லிமலை நாட்டை ஆண்டவன்
காரி - காரி என்னும் குதிரைமேல் சென்று போரிட்டவன்
மலையன் - 'மறப்போர் மலையன்', மாரி போல் ஈகைப்பண்பு கொண்டவன்.
எழினி - குதிரைமலை நாட்டை ஆண்டவன் ("ஊராது ஏந்திய குதிரை"), கூவிளங்கண்ணி மாலை அணிந்தவன். கூர்வேல் கொண்டு போர் புரிபவன்.
பேகன் - கடவுள் காக்கும் மலை (பொதினி என்னும் பழனி) நாடன்
ஆய் - "மோசி பாடிய ஆய்"

1 comment: