இடையர் புரிந்த போர்கள்:
வெட்சி திணை:
கரந்தை திணை:
கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.
ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலர் என்ற பெயர் முல்லை நிலத்தில் தோன்றியது தான்! கோவலன் = கோபாலன் = கண்ணன்!
வெட்சி திணை:
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழில் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.கோவலர் ஆநிரை கவர்வதில் வல்லவர்
மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத்துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும் ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.
கரந்தை திணை:
கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.
No comments:
Post a Comment