Saturday 1 March 2014

மாவீரன் சத்ரபதி சிவாஜி

மாவீரன் சத்ரபதி சிவாஜி யாதவ்: (Maharaj Chatrapati Shivaji yadav)

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மராட்டியர் எழுச்சி தென்னிந்திய வரலாற்றில் ஒர் முக்கிய நிகழ்வாகும். டெல்லி சுல்தானியரின் ஆட்சியை எதிர்த்து நின்று இந்துசமயம் இந்துதர்மம் என்பவற்றைத் தென்னகத்தில் பாதுகாத்தவர்கள் மராட்டியர்கள்.
இதற்கான அடித்தளத்தினை இட்டுக் கொடுத்தவன் மன்னர் ஷாஜிபான்ஸ்லே ஆவார்.

இந்த வரிசையில் மன்னர் சிவாஜியும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார் . மராட்டிய மன்னர்களில் தலைசிறந்தவராக சிவாஜி யாதவ் மராட்டியர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தார் ;. இதனால்தான் வரலாற்று ஆசிரியர்கள் மகாராஷ்டிர நாட்டை உருவாக்கிய பெருமை மன்னர் சிவாஜிக்கே உரியதாகும் எனக் கூறுகின்றனர். மன்னன் சிவாஜி யாதவ் அரசியல் நடவடிக்கைiளில் மட்டுமின்றி சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும் வலுவான படையமைப்பினையும் கொண்டிருந்ததோடு சிறந்த ஆட்சியாளனாகவும் விளங்கினார்.

சிவாஜி யாதவ் சிவநேர் கோட்டையில் ஷாஜிக்கும் ஜீஜாபாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்(1630). அன்னையின் அரவணைப்பிலே இளமைப்பருவத்தினைக் கழித்தார். ஒரு சீரிய இந்துவாக உருவாகிய சிவாஜி தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து ஆட்சி பீடமேறினார்.

மன்னன் சிவாஜியினுடைய ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிர அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சி நிலையினை அடைந்தது. இவர் சமகாலத்தில் ஆங்கிலேயருக்கும் மொகாலயருக்கும் சவாலாக விளங்கினார். பொதுவாக மராட்டியர்கள் வீரத்தில் சிறந்தவர்களாகக் காணப்பட்டனர். பலம்மிக்க பேரரசாகக் காணப்பட்ட மொகாலயர் மீது அடிக்கடித் தாக்குதல்களை நடத்தி அவர்களது ஆட்சியினைப் பலவீனப்;படுத்தியிருந்தார். மற்றையது சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயரின் பரவல் கூடுதலாகக் காணப்பட்டது. அவர்கள் இந்தியாவினுள் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வதனை விரும்பாத சிவாஜி ஆங்கிலேயரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து அவர்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.

நெப்போலியன் ஆட்சிக்கு வந்த கால கட்டம் கூட பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு எழுந்த அரசியல் அதிகார வெற்றிடத்தின் போது என்பதை நாம் எண்ணிப் பார்க்கிறோம்.

ஆனால் சிவாஜியோ வலிமையானதும், நிலையானதுமாகவும், உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாகவும் இருந்த முகலாயப் பேரரசையும், அதே நேரம் தக்காண சுல்தான்களையும் எதிர்த்துப் போராடி சத்ரபதியாக உயர்ந்தது உலக வரலாற்றில் இணையற்ற ஒரு செயல் என்பதாகவே நாம் அறிகிறோம்.

இந்தக் கட்டுரையிலே மிக முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால் மாமன்னன் சிவாஜி யாதவ் எந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மையும் , பிற மதங்களை மதிக்கும் பண்பும், பிற மதங்களுடன் நல்லிணக்கம் காட்டுபவராகவும் இருந்தார் என்பதைப் பற்றி ஆகும்.
எந்த ஒரு பகுதியையும் சிவாஜி யாதவ் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவுடன் அவர் இடும் முதல் கட்டளைகளில் ஒன்று பிற மத வழிபாட்டு தளங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதே.
பிற மதங்களின் வழி பாட்டு தளங்களை சேதப் படுத்தியதாகவோ, கேவலப் படுத்தியாதாவோ ஒரு சிறு குறிப்பை கூட சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் நம்மால் காண இயலவில்லை. பிற மதத்தவரால் தங்களுடைய கோவில்கள் சேதப்படுத்தப் படுவதானா வருத்தத்தை நெஞ்சில் தேக்கி வைத்திருந்த மாவீரன் சிவாஜி யாதவ், அப்படிப் பட்ட கீழ்த் தரமான முரட்டு அடாவடியை தாம் ஒரு காலும் செய்யக் கூடாது என்று செயல் பட்டது புரிந்து கொள்ளக் கூடியதே.

சிவாஜி யாதவ் தன்னுடைய ஆட்சிப் பரப்பினை விஸ்தரிப்பதற்காகப் பல போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்;. அந்தவகையில் பிஜாப்பூர் சுல்தான் அடில்சாவின் தேர்னாக்கோட்டை (1646) இபரந்தா ;கோட்டை(1647), ஜாவளி (1656) போன்ற இடங்களையும் கைப்பற்றினார் . அங்கே பிரதாப்கார் என்ற கோட்டையையும் தன் வழிபாட்டுக் கடவுளான பவானிக்கு ஒரு கோயிலையும் கட்டினார். மேலும் பூனா இசதாரா மாவட்டங்களுடன் பல புதிய இடங்களையும் கைப்பற்றினார்(1659). கோவாவின் ஒரு பகுதியை தன்னாட்சியுடன் இணைத்துக்கொண்டார்(1664). இவ்வாறு 1670இல் மொகாலயரின் பல பிரதேசங்களை தனது ஆட்சிப் பரப்புடன் இணைத்துக் கொண்ட சிவாஜியின் ஆட்சிப்பரப்பு வடக்கே ராம் நகரிலிருந்து தெற்கே கார்வார் வரையிலும் கிழக்கில் பக்லானாவிலிருந்து மேற்கில் சதாராஇ கோலாலம்பூர் முதலிய மாவட்டங்களிலும் தனது ஆட்சிப்பரப்பினை விஸ்தரித்திருந்தார்.

இருப்பினும் அதனைத்; தெளிவாகக் கூறமுடியாது. ஏனெனில் தொடர்ச்சியான போர் நடவடிக்கைகளினால் ஆட்சிப்பரப்பு அடிக்கடி மாறிக் கொண்டேயிருந்தது.

1674ஆம் ஆண்டு யூன் ஆறாம் திகதி தன்னை ஒரு மகாராஜாவாக மாற்றிக் கொள்ள விரும்பிய சிவாஜி யாதவ் சத்ரபதி மகாராஜா என்ற பட்டத்துடன் முடிசூடிக் கொண்டர். இவர் அரசியல் உலகில் துணிச்சலோடு கண்ட பல வெற்றிகளுடன் சிறந்த நிருவாகக் கட்டமைப்பினையும் ஏற்படுத்தினார் .

No comments:

Post a Comment