ஆய் வேளிர்கள் யது வம்சத்தவர்கள் வேளிர் மற்றும் 18 வகையான யாதவ குடிகள் கிருஷ்ணரின் துவாரகையில் இருந்து அகத்திய முனிவருடன் வந்தவர்கள். இவர்கள் முல்லை நிலத்தில் குடி அமர்த்தபடுகின்றனர். பின் காடு அழித்து நாடாக்கி மன்னர்களாக ஆட்சிபுரிந்தனர்.கடையெழு வள்ளல்களும் இமக்களே வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத் தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.) துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன என்று வரலாறு கூறுகிறது
ஆதாரம்:
http://books.google.co.in/books?id=F-_eR1isesMC&pg=RA1-PA34&dq=velir&hl=en&sa=X&ei=VI72UabUC8Kj4gSqhYH4Cg&ved=0CDcQ6AEwAQ#v=onepage&q=velir&f=false
No comments:
Post a Comment