வேளிர்கள் க்ஷத்ரிய குலமான யாதவர்கள். வேளிர்கள் மற்றும் 18 வகையான
யாதவர்கள் துவாரகையில் இருந்து அகத்திய முனிவருடன் மஹாரஷ்டிரா,கர்நாடகா
வழியாக தமிழக பொதிய மலை வரை வந்தனர். சில யாதவர்கள் வழியிலே குடி
அமர்ந்தனர் இவர்களின் பொதுப்படையான அம்சம் பகவான் கிருஷ்ணரின் பரம்பரை என்று கருதுகின்றனர். இந்த வேளிர்கலே சிந்து சமவெளியில் ஏறுதழுவல் நடத்தியவர்கள்.
கிருஷ்ணனும் ஏறு தழுவியே மணந்துக் கொண்டான்.
”மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) கூறுகிறார். அதாவது ஏழு எருதுகளை அடக்கி
நப்பின்னை என்னும் ஆயர் குல மகளைக்
கிருஷ்ணன் மணந்து கொண்டான்.
ஏறு தழுவுதல் சின்னம் கிடைத்த அதே மொஹஞ்சதாரோ பகுதியில் கிருஷ்ணாவதாரத்தைப் பறை சாற்றும் இன்னொரு ஆதாரம் கிடைத்துள்ளது.
அது ஒரு குழந்தை உருவம் கொண்ட முத்திரை ஆகும். இது கிருஷ்ணன் உருவமாகும் என்று ஆராய்ச்சியாளார் திரு என்.எஸ். ராஜாராம் அவர்கள் கூறுகிறார்
தற்போது பேட் துவாரகை என்று சொல்லப்படும் துவாரகை (கிருஷ்ணன் காலத்துக்குப் பிறகு ஏற்பட்டது இது) முழுகிய போது, அகஸ்தியர் அங்கிருந்த வேளிர் உள்ளிட்ட அரச வம்சத்தினரையும், 18 விதமான தொழில் வன்மை பெற்றிருந்த 18 யாதவ குடி மக்களையும் தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்து பொதிகைக்கு அருகே காடழித்து நாடாக்கிக் குடியமர்த்தினார்.
இது நடந்த்து பொ.மு 1500 இல். அப்பொழுது வட மேற்கு இந்தியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்கள் காரணமாக, சரஸ்வதி நதி முழுவதும் பூமிக்குள் இறங்கி விட்டது. அதன் படுகையில் தான் இன்றைக்கு நாம் சிந்து சமவெளி நாகரிகம் என்கிறோமே அந்த மக்களில் முக்கால்வாசி பேர் வசித்து வந்தனர். அவர்களில் ஒரு பகுதி கங்கைக் கரை நோக்கி இடம் பெயர்ந்தனர். வட மேற்கில் இருந்தவர்கள் மேலும், வட மேற்கு நோக்கி நகர்ந்து ஈரான், ஈராக், மத்திய ஐரோப்பா பகுதிக்குச் சென்றனர். அந்த மக்களின் அடையாளம் இன்று சொல்ல முடியாதவாறு பிறருடன் கலந்து விட்டது.
ஆனால் துவாரகைப் பகுதியில் இருந்த மக்களை அகஸ்தியர் தமிழ் நாட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தார். அவர்கள் சேர, சோழ , பாண்டிய அரசுகளின் எல்லைப் புறங்களில் குடியமர்ந்தனர். தர்மபுரி, க்ருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஹோசூர், பெங்களூர், வயநாடு, மைசூர், கோயம்புத்தூர், பழனி போன்ற இடங்களில் குடியமர்ந்தனர். இந்த மக்களது குடியிருப்புகள் மஹாரஷ்டிரா துவங்கி, கர்னாடகா வழியாக கன்னியாகுமரி முனை வரை சென்றது.
கடை எழு வள்ளல்கள் அனைவரும், இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த வேளிர் அரசர்களே.ஔவைக்கு நெல்லிக் கனி தந்த அதியமான் தர்மபுரிப் பகுதியை ஆண்டான். அவனும் இந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவனே. இவர்கள் வந்த பிறகுதான் ஐந்திணைகளாகத் தமிழ் நிலம் பகுக்கப்பட்டது. காடழித்து நாடாக்கிய முல்லைத் திணை உருவாக்கப்பட்டு அங்கு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர். முல்லைக் கலியில் கிருஷ்ணனைப் பற்றி தூக்கலாகச் சொல்லப்படுவதற்கு இவர்களது துவாரகை மூலமே காரணம். துவாரகைக்கு வருவதற்கு முன் இந்த 18 குடிகளும் கங்கைக் கரைப் பகுதியில் இருந்தனர் என்பதற்கு மஹாபாரதத்தில் சாட்சி இருக்கிறது.
தச்சன், குயவன், கல் வேலை, பொன் வேலை போன்ற கைத் தொழில் அனைத்தும் இவர்கள் வசம் தான் இருந்தன.
இன்றைய கர்நாடக மகக்ளும், பெரும்பான்மையான கேரள மக்களும் இந்த துவாரகை வம்சாவளி மக்களே. என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
http://www.viswamurugu.com/link3.html

No comments:
Post a Comment