Friday, 13 June 2014

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன்

ஆய் குல மன்னர்கள் பொதிகை மலை அருகே உள்ள ஆயக்குடியை தலைநகராய் கொண்டு ஆண்டு வந்தனர் இவர்கள் தம் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் ஆய் என்ற பட்டதை கொண்டு உள்ளனர். இவர்கள் தங்களை ஆய் குலம் என்றும் யாதவ குலத்தினர் என்றும் செப்பேட்டில் கூறியுள்ளனர். இவர்கள் ஆயக்குடியை தலைநகராய் கொண்டு பல பகுதிகளை ஆண்டு உள்ளனர். இவர்களில் ஓர் அரசன் தான் கோகருந்தடக்கன்

ஆய் குல அரசன் கோகருந்தடக்கன் கி.பி 855ல் பாபநாசம்,திருநெல்வேலி,கழுகுமலை,கோயில்பட்டி,சங்கரன்கோவில்,நாகர்கோவில்,திருவனந்தபுரம் பகுதிகள் அக்காலத்தில் மலைநாடு என்று அழைக்கப்பட்டன. அப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இவன் மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் சமகாலத்தவன். 1904 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோபிநாதராவ் என்பவர் முதன் முதலில் திருவிடைகோடு என்ற இடத்தில் கோகருந்தடக்கனை பற்றி சில கல்வெட்டுகளை பார்த்ததாக கூறியுள்ளார்.

இதன்பிறகு 1908 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் செப்பேடுகளில் திரு.கோபிநாதராவ் படித்து பார்த்தபோது இதில் எல்லா தமிழ் செப்பேடுகளிலும் கோகருந்தடக்கன் என்ற பெயர் பொறிக்கபட்டிருந்தது கண்டு ஆச்சரியமுற்றுள்ளனர். இந்த செப்பேடுகள் மூலம் இவன் ஒரு ஆயர் குல அரசன் என்பதும் இவன் ஆட்சிகாலத்தில் செய்த சாதனைகளை பதிவு செய்துள்ளான்.

இதில் மீன்சிரை என்ற ஊரில் இருந்த உலக்குடிவில்லை என்ற பெயருடைய ஒரு நிலத்தை மீன்சிரை கிராம சபையிடமிருந்து கோகருந்தடக்கன் விலைக்கு வாங்கி அந்த நிலத்தின் நான்கு பக்கமும் பெண் யானையை நடக்கவிட்டு அளந்து கற்கள் நட்டு ஒரு விஷ்ணு கோவிலை நிர்மானித்தான் பின்பு அந்த பகுதிக்கு பார்த்திவ சேகரபுரம் என்று பெயரிட்டுள்ளான். செப்பேட்டின் இரண்டாவது இதழில், பார்த்திவ சேகரபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் பூசாரிகள் கடமை பற்றியும், கோவிலுக்கு மலர்கள் தருபவர்களின் தினசரி வேலை பற்றியும் கோவிலில் அணையாவிளக்கு அமைத்து பராமரிப்பவர்களுக்கான கூலி பற்றியும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்பேட்டில்,கல்விச்சாலையில் மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் விஷ்ணு கோவிலை ஒட்டி 95 மாணவர்கள் தங்கி படிக்க ஒரு சாலையும் அமைத்து கொடுத்துள்ளார் என்றும், மாணவர்கள் பள்ளியில் தங்கும்போது மற்ற மாணவர்களை துன்புறுத்தக்கூடாது,மாணவர்கள் தங்கும் இடத்தில் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பொது இடங்களுக்கு கொண்டுவரக்கூடாது. ஆயுதத்தால் சகமாணவர்கள் இம்சிக்ககூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இச்செப்பேட்டின்படி வேதப்பள்ளி நடத்த அனுமதிக்கப்பட்ட உணவுச்சாலை பொழிசுழ் நாட்டைச்சேர்ந்த குரட்டுர் நாட்டிற்கு உட்பட்ட இடைக்குரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தது.இந்த பள்ளி ஒரு தர்மஸ்தாபனம். தர்ம ஸ்தாபனம் எந்த வகையில் நடைபெற வேண்டுமோ அந்த வகையில் நடைபெறுகிறதா எனமலைநாடு,சிங்கால் நாடு,முதலநாடு,படைப்பாநாடு மற்றும் வழுவா நாட்டு மக்கள் கண்காணிக்க அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மலை நாட்டை ஆண்ட ஆய் குல அரசர்களின் நியாயமான ஆட்சி முறை தெரிகின்றது. வாழ்க வளர்க! ஸ்ரீவல்லபன் என்று அழைக்கப்படும் இவ்வரசன் தனது புகழாலும், அன்பாலும் எதிரிகளை அழித்தவன், நந்தா அரசன் வழியிலும் யாதவ கு
லத்திலும் தோன்றியவன்.தனது தலைவன் கிருஷ்ண பரமாத்மா மீது நெருங்கிய பக்தி கொண்டவன்.

கீழே குறிப்பிட்ட ஆவணங்கள் ஆய்குல ஆட்சியில் ஆயக்குடி தலை நகராக இருந்ததையும். பின்னாளில் வாழ்ந்த ஆய்குல அரசி ஆய்குல மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காணலாம்

215. The Trevandram Huzur office plates of Kokkaru-
nandadakkan- '.Tamil language and alphabet.) Records that on
14490871!! day of the Kali era, and fifteenth day of the ninth year
of king Karunandadakkan, he purchased from the Sabha of
Minchirai a plot of land, erected a Vishnu temple on it together
with a sdUi for 95 saftars (scholars) and endowed lands for temple
services, lamps, festivals, etc. The king must have ascended the
throne about A.D. 855-6. He belonged to the Yadava or Aykula
dynasty who ruled over the mountain tracts of South Travancore
who had Ayakudi for their capital and who were called the Lords
of the Podiya mountain. Mr. Gopinatha Rao traces the history of
the Ay king Andiran as far as it is ascertained from the Purand-
nuru. See Trav. Arch. Scr., Vol. I, p. 3. He also points out that
Karunandadakkan of these plates should be the same as Adakkan
or Sri Vallabha, the son of Karunandan and grandson of Sadayan,
and contemporary of Varaguna Pandya, who came to the throne in

216. The Huzur office plate of Vikramaditya Varaguna.
(Tamil.) The record belongs to the eighth year of king Vikrama-
ditya Varaguna and says that while staying at Tirunandikarai he
married Murugan Sendi or Aykula Mahadevi, the daughter of
Teriganadu Kilavan, and granted some lands for her enjoyment.
Mr. T. A. Gopinatha Rao gives arguments to show that this king
was the successor of Kokkarunandadakka referred to in the
previous inscription. See Trav. Arch. Ser., Vol. I, No. II. 


ஆதாரம்:

http://www.ebooksread.com/authors-eng/v-vijayaraghava-rangacharya/a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala/page-28-a-topographical-list-of-the-inscriptions-of-the-madras-presidency-collected-til-ala.shtml

கோச்சடையான் ரணதீரன்

நண்பர்களே , சமீபகாலமாகவே சினிமாத்துறையிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி கொண்டிருக்கும் திரைப்படம் கோச்சடையான் ! சரி திரைப்படம் ஒரு புறம் இருக்கட்டும் , யார் இந்த கோச்சடையான் ? ஆவல் கொண்டு தேடியதில் எனக்கு கிடைத்த சில தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் . எனது பதிவில் கூறவிருக்கும் தகவளோடு உங்களுக்கு மாற்றுகருத்து இருப்பினும் தெரியபடுத்தலாம்.. சரி வாருங்கள் கோச்சடையானை பற்றி காண்போம் ....

கோச்சடையான் பாண்டிய மன்னர்களுள் ஓர் தலைச்சிறந்த மாவீரன் ஆவார் , இவர் திபி 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர், வீரத்திற்கு பெயர் பெற்றவர். இவர் திபி 670 முதல் திபி 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தார்.

தனது தந்தையின் மறைவிற்கு பிறகு அரியணையில் அமர்ந்தார் , இவர் பொறுப்பேற்கும் போது பாண்டிய நாடு சற்று சிறப்பற்றே இருந்தது , அதன் பின்னேர் இவர் மேற்கொண்ட போர்களினாலும் வெற்றிகளினாலும் பாண்டியநாடு முன் எப்போதும் இல்லா அளவிற்கு பெரும் புகழும் பெற்றது , ராஜிய எல்லைகளும் விரிவடைந்தது. மேலும் கோச்சடையன் ரணதீரன் தனது நாட்டை விரிவுபடுத்த எண்ணி வடக்கில் உள்ள மாளவ நாட்டை நோக்கிப் படையெடுத்தான். இப்போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்.


அப்போது சேர நாடும் கோச்சடையான் ஆளுகை கீழ் இருந்தது ,சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க படையுடன் கோச்சடையான் சென்றிருந்த வேளையில் சாளுக்கிய மன்னன் விக்கிரமாத்தன் தமிழகத்தின் மீது படை எடுத்து வந்திருந்தார், வரும் வழியில் பல்லவர்களை ஒரு கை பார்த்து விட்டு, அப்படியே மதுரைக்கும் வந்தார். பெரும் படையும் சேர நாட்டில் பிரவேசித்தார், எனவே மதுரைக்கோட்டை வாசலை அடைத்து விட்டு உள்ளிருந்து கோட்டையைப்பாதுகாக்க துவங்கினார்கள். அப்பொழுது பாண்டிய அரசி கோட்டையில் இருந்தார் அவரே களம் இறங்கி வீரர்களை ஊக்கப்படுத்தி வழி நடத்தி கோட்டையை காவல் காக்க செய்தார் எனவும் தகவல் உண்டு.

பெரும் படையுடன் வந்திருந்த விக்கிரமாதித்தன் பல நாட்கள் முற்றுகையிட்டு உள் நுழைய போராடியும் கோட்டைக்காவலர்கள் சுற்று சுவரில் அரணாக நின்று உள் நுழையும் முயற்சிகளை எல்லாம் முறியடித்தார்கள். நாட்கள் செல்லவே விரக்தியடைந்த விக்கிரமாதித்தன் மதுரை வீழ்ந்தது என அவராகவே வெற்றியை அறிவித்துக்கொண்டு மதுரைக்கு அந்த பக்கம் இருக்கும் குறு நில மன்னர்களையும் அடக்கி மொத்த தமிழகத்தையும் கைப்பற்ற மேற்கொண்டு முன்னேறி திருநெல்வேலி வரை முன்னேறி சென்று முகாமிட்டார்.

இதற்கிடையே தகவல் கிடைத்த கோச்சடையான் கடுங்கோவத்துடன் பெரும்படையுடன் பாண்டிய நாடு திரும்பி, நேராக நெல்லைக்கு சென்று அங்கே வைத்தே விக்கிரமாதித்தனுடன் மோதினார் கடும் போரில் கோச்சடையானுக்கே வெற்றி கிட்டியது. தப்பித்தால் போதும் என பின் வாங்கி ஓடி வந்த விக்கிரமாதித்தனை காவிரி கரை வரைக்கும் கோச்சடையான் விரட்டி வந்தார்.

விக்கிரமாதித்தன் போரில் கிடைக்கும் விழுப்புண்களை பெருமையாக நினைப்பவர் என்பதால் அவருக்கு ரணரசிகா என்று பட்டப்பெயர் உண்டு.எனவே விக்கிரமாதித்தனை வென்றதால் ரணதீரன் கோச்சடையான் என பாண்டிய மன்னன் பெயர்ப்பெற்றான்.

அதன் பின்னர்க் கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான்.

இம்மன்னனுக்கு ரணதீரன் கோச்சடையன், செங்கோல் தென்னன், வானவன், செம்யன், மதுரகருநாடகன், கொங்கர்கோமான், மன்னர் மன்னன் போன்ற பல பட்டப் பெயர்களைக் கொண்டிருந். இதற்குச் சான்றாக வேள்விக்குடிச் செப்பேடு இருப்பது குறிப்பிடத்தக்கது.




இவர் தன்னை சந்திர வம்ச யாதவ குலம் எனவும் தனது தானப் பட்டயத்தில் குறிப்பிட்டுள்ளார் ...

முதலாம் இராசசிம்மன், தேர்மாறன் என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான்.

ஆயர் குல வள்ளல் பேகன்


 பேகன் கடையெழு வள்ளல்களுள் ஒருவர்:
 
 

வேள் - பேகன்.

இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன் (ஆ+இனம்+குடி =>ஆவினன் குடி =>ஆயர் குடி ); இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது "முரசுகடிப்பிகுப்பவும்" என்னும் புறப்ப பாட்டாலும்(158) சிறுபாணாற்றுப் படையில் 84- முதல் 122-வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன்மையைப் பரணர் என்னும் பழையபுலவர் புகழுமிடத்து--" குளத்திலும் வயலிலும் களர்நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவதல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"--என்ற கருத்துப்பட,

" அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும்
  உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
  வரையா மரபின் மாரி போலக்
  கடாஅ யானைக் கழற்காற் பேகன்
  கொடைமடம் படுத லல்லது
  படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே"

என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடுவது கண்டு, ' அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றது போலும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படாத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான்-- என்பதாம்.இச்செய்தி--

" உடாஅ போரா ஆகுத லறிந்தும்
  படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ
  கடாஅ யானைக் கலிமான் பேக!"

எனப் பரணரும் (புறம்-141)

யாதவராயர்கள்

யாதவராயர்கள் என்போர் 12,13ம் நூற்றாண்டுகளில் சோழர்களின் கீழே இருந்த குறு நில மன்னர்கள்.
தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி போசள அரசன் வீர வல்லாளனுக்கு அடியிலும்,
பின்னாளில் 14-ம் நூற்றாண்டில் விசய நகரப் பேரரசிற்கும் அடியில் தொடர்ந்தது. இவர்கள் கீழைச்
சாளுக்கியர்களின் வழி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மேலும் தென் தமிழக யாதவர்களுக்கும் தொண்டைமண்டல யாதவர்களுக்கும் யாதவராயர் என்ற பட்டம் இருந்தது.யாதவராயர்கள் கிட்டத்தட்ட மாநில
ஆளுநர்கள் போலச் சோழர்களுக்குப் பணிபுரிந்திருக்கிறார்கள். இவர்கள் திருக்காளத்திக் கோயிலிலும்,
திருவேங்கடம் கோயிலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

இவர்களின் முதல் அரசன் சாளுக்கிய நாராயணன். அவன் பேர்கொண்ட மரக்காலில் தான் திருவேங்கடம்
கோயிலில் 17-ம் நூற்றாண்டு வரை கோயிலுக்கு வரும் கூலங்களை (தானியங்களை) அளந்திருக்கிறார்கள்.
இந்தக் குலத்தில் வந்த வீர நரசிங்க தேவன் (கி.பி.1205 - 1262) துலாரோகணம் (துலையின்
ஒருபக்கத்தில் இவனும் இன்னொரு தட்டில் பொன்னும் இட்டு அளந்து அதை கோயிலுக்குக் கொடுப்பது) செய்து வந்த
மாழையைக் கொண்டுதான் கோயில் விமானத்திற்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள். இன்றும் அந்தப்
பொன்வேய்வை நாம் பார்க்கிறோம். சென்னையின் அருகில் உள்ள திருவொற்றியூரில் தன் பெயரிலேயே வீர
நரசிங்கேசுவரம் உடைய நாயனார் என்றபெயரில் படிமம் அமைத்துள்ளான்.

இந்த யாதவர்களின் கடைசி அரசன் பெயர் ஓபள யாதவன். இவன் தஞ்சையின் அரசன் என்றும் சொல்லப்
பெறுகிறான். காரணம் புரிபடவில்லை. ஓபளனைப் பற்றிய கீழே வரும் இந்த வெண்பா இன்னிசை வெண்பாப்
போல் தெரிகிறது. (ஆனால் தளை எங்கோ இடிப்பது போலவும் தெரிகிறது.) கல்வெட்டில் சிதைந்து
காண்பதால் இங்கே ஒரு சீரும் குறைகிறது.

ஓதவளர் வண்மை ஓபளநா தன்தஞ்சை
யாதவர்கோன் வாழ்வினி தூழிபுக
மருக்குலவும் சோலை வடவேங்கட வாணர்க்குத்
திருக்கைமலர் தந்தான் சிறந்து.

பழங் கல்வெட்டில் வந்துள்ள வேறு ஏதேனும் வெண்பாக்கள் இருந்தால் இடுங்களேன். ஒலையில் இருந்தவற்றை மட்டும்
தானே நாம் அறிந்துள்ளோம்.

யாரந்த நப்பின்னை?


விஷ்ணுவின் எல்லா அவதாரங்களையும்பற்றி விரிவாகப் பேசும் பாகவதம் கிருஷ்ணாவதாரத்தை மிகமிக விரிவாகப் பேசுகிறது. அது ராதை என்ற பெயரைச் சொல்வதே இல்லை. நப்பின்னை என்பது ராதையல்ல.

திருப்பாவையில் 'நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்' என்று நப்பின்னையை அழைக்கிறார் கோதை. பார்க்கப் போனால் மூன்று பாடல்களில் தொடர்ந்து ஆண்டாள் நப்பின்னையை விவரித்திருக்கிறாள். வேறு எந்தப் பிராட்டியின் பெயரையும் சொல்லவில்லை. ஆண்டாள் அழைக்கின்ற வேளை அதிகாலைப் பொழுது. தந்ததினால் செய்த கால்களையுடைய கட்டில்மேல் கண்ணன் தனது மனைவியான நப்பின்னையின் மார்பின்மேல் தன் மலர்மார்பை வைத்து உறங்கிக் கொண்டிருக்கிறானாம். அவளோ கண்ணன் தன்னைவிட்டு அகன்று போவதையே பொறுக்காதவளாம். எனவே அவளைச் சமாளித்தால்தான் கண்ணன் துயிலெழுந்து வந்து இவர்களது பாவை நோன்புக்கான உக்கமும், தட்டொளியும் (விசிறியும், கண்ணாடியும்) முதலியன தந்து பாவை நோன்பை முடித்து வைப்பான். எனவே அத்தையுடன் தன் சொந்த வீட்டில் இப்படிப் படுத்திருக்கச் சாத்தியம் இல்லை.

அப்படியானால் நப்பின்னை என்பது யார்? யசோதையின் சகோதரனான கும்பன் என்ற நக்னஜித் அயோத்தியின் மன்னனாக இருந்தான். அவனுடைய மகளை சத்யா, சௌந்தர்யவதி என்றும் நக்னஜிதை என்றும் அழைத்தனர். இவள்தான் நப்பின்னை என்று பெரியோர் கருதுகின்றனர். இவள் கிருஷ்ணனுக்கு மாமன் மகளாகிறாள். ராதையை அத்தை என்றல்லவா சொல்கிறார்கள்?

சிறுவனான கண்ணன் பசுக் கொட்டிலிலே விளையாடி உடலெல்லாம் மண்ணாக்கிக் கொள்கிறான். அவனுடைய தாய் யசோதை சொல்கிறாளாம் "நீ பசுத் தொழுவத்தில் உடலை மண்ணாக்கிக் கொண்டதைப் பார்க்க எனக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. (இந்தக் காலத்தில் ஒரு தாயார் இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.) ஆனால் ஊரார் பழிப்பார்களே! அட வெக்கமில்லாத பயலே, உன்னை நப்பின்னை பார்த்தால் சிரிப்பாளே! வா குளிக்க" என்று. பாடல் இதோ:

பூணித் தொழுவினிற் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்!
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே!
மஞ்சனம் ஆடநீ வாராய்!

(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்: பெரியாழ்வார் திருமொழி: 160)

[பூணி - பசு]

மாமன் மகள் உன் அழுக்குத் திருக்கோலத்தைப் பார்த்துச் சிரிப்பாள் என்று சொல்லித்தான் குளிக்கவைக்கிறாள் யசோதை கண்ணனை. தமிழில் பிஞ்ஞை என்றால் மயில். மயில்தோகைபோன்ற அழகிய கூந்தலை உடையவள் நப்பின்னை என்பது பொருள்.

சிலப்பதிகாரத்தில் நப்பின்னையைப் பற்றி 'ஆய்ச்சியர் குரவை'யில் வருகிறது. காட்சி இது: பாண்டிய மன்னன் தவறாகக் கோவலனைக் கொன்றுவிடுகிறான். செங்கோல் வளைந்துவிடுகிறது. இங்கே ஆயர்குடியில் இருக்கும் பெண்களுக்குத் தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. பால் தயிராக உறையமாட்டேன் என்கிறது; திரண்ட திமிலை உடைய காளைகளின் கண்களில் நீர் வழிகிறது. முதல்நாள் சிலுப்பி உறியிலே எடுத்து வைத்த வெண்ணை உருக மாட்டேன் என்கிறது. துள்ளிவிளையாடும் இயல்பை உடைய ஆட்டுக்குட்டிகள் அசையாமல் கிடக்கின்றன. பசுக் கூட்டங்கள் தம் உடல் நடுங்க அலறுகின்றன. அவற்றின் கழுத்திலே இருக்கும் மணிகள் காரணமின்றி அறுந்து விழுகின்றன. இவற்றை எல்லாம் பார்த்த மாதரி "இந்த நிகழ்வுகள் நமக்கு ஏதோ ஒரு தீமையை முன்னறிவிக்கின்றன" என்று தன் மகளிடம் சொல்லுகிறாள்.

"இந்தத் துன்பம் நீங்கவேண்டுமானால், மாதர்க்கு அணிகலனாகிய கண்ணகி நம்மோடு இருந்து காண, ஆயர் குல தெய்வமாகிய கண்ணன் தன் மனைவி நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை நாம் ஆடவேண்டும்" என்று மாதரி சொல்கிறாள்.

மகளை நோக்கி "மனம் மயங்காதே!
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய
கண்ணகியும் தான் காண
ஆயர் பாடியில் எருமன்றத்து
மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில்
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்" என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே

(சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை)

[தம்முன் - தன் முன்னவனான பலராமன்]

எனவே கண்ணன் பலராமன் மற்றும் நப்பின்னையோடு பொதுவிடத்தில் வாலசரிதையைக் குரவையாக ஆடியிருக்கிறான். ராதையோடு இவ்வாறு ஆடியிருக்க முடியாது என்று கருதுவோர் உண்டு. பரிபாடலிலும் நப்பின்னை பற்றிய குறிப்பு உண்டு.

மாமன் மகளே ஆனாலும் கண்ணன் அவளை எளிதில் அடைந்துவிடவில்லை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் அவற்றையடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். ஆனால், இந்தக் கதை தென்மாநிலங்களிலேயே அதிகம் வழங்குகிறது என்பர் அறிந்தோர். சன் டி.வி.யின் காலைமலர் நிகழ்ச்சியில் பேசிய ஒரு வைணவ அறிஞர் வட இந்தியாவில் புழங்கும் பாகவதத்தைவிடத் தென்னிந்தியாவில் புழங்கும் பாகவதத்தில் சுமார் 800 (நான் நினைவிலிருந்து தரும் எண்ணிக்கை ஏறக்குறைய இருக்கலாம்) வடமொழிச் செய்யுள்கள் அதிகம் இருக்கின்றன என்று கூறினார். முந்நாளில் தென்னிந்தியாவில் சமஸ்கிருத அறிஞர்கள் அதிகமிருந்தனர், அவர்கள் சிறந்த செய்யுள் இயற்றும் வன்மை பெற்றிருந்தனர், இங்கே பாகவதக் கதைகள் வடக்கை விட அதிகமாகவும் இருந்தன என்பவற்றை இது காட்டுவதாகவும் அவர் சொன்னார்.

திருமாலுக்கு மனைவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்பர். இதிலே நப்பின்னை நீளாதேவி(கடல்தாய்)யின் அவதாரம் என்று வைணவ மரபு உண்டு. எனவே இவரை இளையபிராட்டி என்பதும் ஒரு சம்பிரதாயம். ஆனால் நப்பின்னை மிகவும் விவாதத்திற்குரிய, விவாதிக்கப்பட்ட விஷயம் என்பதல் இந்தப் பத்தியில் நான் சொல்லும் ஒவ்வொன்றும் அறுதியிட்டுச் சொல்லப்படுவனவல்ல.

கடைசியாக ஒரு கேள்வி. கீழே வரும் செய்யுள் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுல் ஒன்றான பொய்கையாரின் 'இன்னிலை'யில் காணப்படுகிறது. இதிலே நப்பின்னை என்ற சொல் வரக் காண்கிறோம். என்ன கருத்துப் புலத்தில்?

ஒப்புயர்வில் ஞாலம் ஒருநிலைப்பட்டாழ்ந்த செயல்
நப்பின்னை ஞாலம் ஒருங்கறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி அறிந்து.

(இன்னிலை: பாடல் 22)

ஏழை, இடையன், இளிச்சவாயன்



சித்தர்களில் ஒருவரான இடைக்காடரிடம் சில பக்தர்கள் பெருமாளின் அவதாரங்களில் உங்களுக்கு பிடித்த மூன்று அவதாரங்களைச் சொல்லுங்கள், அவரையே நாங்கள் வழிபட விரும்புகிறோம் என்றனர்.

உடன் இடைக்காடர் அவர்களிடம், ஏழை, இடையன், இளிச்சவாயன் இவர்களை வணங்கி திருவிழா கொண்டாடுங்கள். உங்களை துன்பம் நெருங்காது என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அவர் சொல்லியதன் விளக்கம் இதுதான். ஏழை என்பது ராமனையும், இடையன் என்பது கண்ணனையும், இளிச்சவாயன் என்பது நரசிம்மரையும் குறிக்கும்.

ராமன், தசரத சக்கரவர்த்தியின் மகனாக பிறந்தவர். ஆனாலும், தந்தையின் சொல் கேட்டு வனவாசம் சென்று ஏழையாகவே வாழ்க்கை நடத்தினார்.

அவரே கிருஷ்ணாவதாரத்தில் இடையனாக இருந்தார்.

நரசிம்ம அவதாரத்தில் உக்கிரத்துடன் வாயைத் திறந்து இரணியனை சம்ஹாரம் செய்தார். இதை இளித்தவாயன் எனக் குறிப்பிட்டார்.

இளித்த என்றால் வாயை திறந்த என்றும் பொருள் உண்டு.

அகிலத்திரட்டில் இடையன்சுவாமி

"இடையன்சுவமி என்றாலும் உங்களுக்கும் சட்டமுண்டு"
-அகிலத்திரட்டு

அதாவது இடையன் சுவமியான கிருஷ்ணரும் இந்த பூமியில் கலியில் பிறப்பார். அப்படி பிறந்தால் அவருக்கும் சட்டமுண்டு. அவர் நினைத்தப் படி நடக்கமுடியாது.