Thursday, 13 March 2014

ஆயர்கள் புரிந்த போர்கள்

 இடையர் புரிந்த போர்கள்:

ஆடு, மாடு மேய்த்தலில், விலங்குகளோ விலங்கு குணம் கொண்ட கள்வர்களோ வந்து தங்களது கால்நடைச் செல்வங்களை அபகரிக்க வந்தால், அவர்கள் உயிருடன் திரும்பாத அளவிற்கு தங்களது உயிரையும் பொருட்படுத்தாது போர் புரிவார்கள் கோவலர்கள்(கோ காவலர்கள்) செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார். அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன். செற்றார் திறல் அழிய, சென்று செருச் செய்யும் கோவலர் = ஆநிரைகளை கவர வரும் பகைவர்களின் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்! ஆநிரை காத்தல் = பண்டைத் தமிழரின் அறங்களுள் ஒன்று!
போரின் போது, முல்லை நிலத்தின் பசுக்களைத்தான் முதலில் கவர்ந்து, மிகவும் பத்திரமாக அப்புறப்படுத்துவார்கள்! பசுக்களைக் காக்கும் முல்லை நில மறவர்களுக்குக் கோவலர் என்று பெயர்! கோவலர் என்ற பெயர் முல்லை நிலத்தில்  தோன்றியது தான்! கோவலன் = கோபாலன் = கண்ணன்!

வெட்சி திணை:

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்

தொல்காப்பியப் பார்வையில் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையானது அகத்திணையில் ஒன்றான குறிஞ்சித் திணையின் புறம் எனக் குறிப்பிடப்படுகிறது.
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழில் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளை கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை.கோவலர் ஆநிரை கவர்வதில் வல்லவர்
 மேலும், ஆரம்ப காலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத்துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறு குடிமக்களுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளைக் கவருவதே இயல்பு, இதுவே பிற்காலப் பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது. மேலும், தீங்கில்லா உயிர்களைத் தங்கள் போர்த்தொழிலால் வருத்தாமல் தவிர்க்கவும்  ஆநிரைகளைக் கவர்ந்து அவற்றை பாதுகாத்தனர் எனவும் உரைக்கலாம்.பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.

கரந்தை திணை:

கவர்ந்துசென்ற ஆ நிரைகளை மீட்பதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் கரந்தைப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. கரந்தை என்பது கொட்டைக் கரந்தை என்னும் ஒரு பூண்டு வகையாகும்.

Tuesday, 11 March 2014

யாதவ குல பிரிவு மற்றும் பட்டங்கள்

ஆயர்கள் 
நல்லினத்து ஆயர் அல்லது கோவினத்து ஆயர் - பசுக்களை உடையவர்

புல்லினத்து ஆயர்ஆடுகளை உடையவர்
கோட்டினத்து ஆயர் - எருதுகளை உடையவர்
 இடையர்களில்  18 பிரிவுகள் மேலும் 
ஒவ்வொன்றிலும் 18 கிளைகள் இருப்பதாக 
அறிஞ்சர்கள் சொல்கின்றனர் இடையர்களின் 
பிரிவுகள் தெரிந்தவற்றில் சில

1.கரிகாலன் இடையன்
2.புதுநாட்டு இடையன்
3.சங்குகட்டி  இடையன்
4.கருத்தகாடு இடையன்
5.கல்கட்டி இடையன் 
6.சாம்பன் அல்லது சாம்பவர்  இடையன்
7.அப்பச்சி இடையன்
8.செம்பலங்குடி இடையன்
9.பெண்டுக்குமேக்கி இடையன்
 10.பூழியர் (பூ நாட்டு)  இடையன்
11.அரசன் கிளை இடையன்
12.வருதாட்டு இடையன்
13.பெருந்தாலி இடையன்
14.கள்ளர் அல்லது கள்ள இடையன்
15.சிறுந்தாலி இடையன்
16.நம்பி இடையன் 
17.கருத்தமணி இடையன்
18.பெருமாள் மாட்டுக்காரன் இடையன்
19.ஆணைக்கொம்பு  இடையன்
20.சோழியர் 
21.பாசி இடையன்
22.சிவார் இடையன்
23.கொள்ளு இடையன்
24.வடுக இடையன்
25.வலைய இடையன்
26.தலைப்பா கட்டு இடையன்
27.நாட்டு இடையன்
28.நார்கட்டி இடையர்
29.பால்கட்டி
30.பஞ்சாரம் கட்டி
31.சிவியர் அல்லது சிவாளன்
32.சோழியாடு
33.இராமக்காரர்
34.பூச்சுக்காரர்
35.கொக்கிக்கட்டி  
 யாதவ குல பட்டங்கள் சில:
 
1.சேதிராயர் 
2.சேர்வைக்கரர் 
3.மணியக்காரர், மணியம்  
4.அம்பலக்காரன், அம்பலம்  
5.தேவ்
6.தேவர் 
7.பூழியர் 
8.மலையமான் 
9.மிலாடுடையார் 
10.மந்திரி 
11.யாதவராயர் 
12.மன்றாயர் 
13.பண்டாரம் 
14.பொதுவர் 
15.கரையாளர் 
16.போவண்டர் 
17.அண்டர் 
18.ஆய் 
19.தாஸ் 
20.பிள்ளை 
21.விருஷ்ணி 
22.உடையார் 
23.ராயர் 
24.கீதாரி 
25.வேள் 
26.வானரவீரர்
27.கோன் 
28.கோனார் 
29.கருநந்தன் 
30.இரயேந்திரன் 
31.காங்கேயர் கோன்
32.தோதுவார் 
33.கோவலன் 
34.நம்பியார் 
35.கௌரா 
36.மேயர் 
37.முனியன் 
38.எருமன் 
39.ஆயர் 
40.வடுக இடையர் 
41.நாயுடு 
42.கொல்லா 
43.நாயக்கர் 
44.கரம்பி 
45.முல்லையர் 
46.கோவிந்தர் 
47.ஆன்வல்லவர் 
48.குடவர் 
49.பாலர் 
50.அமுதர் 
51.தொறுவர் 
53.குறும்படை 
54.முக்கந்தன் 
55 மன்னாரிடையர் 
56. குறும்பர் 
57.குறும்ப இடையர் 
58.குறும்பொறை நாடன்
59.நாட்டார் 
60.திருவாயர்பாடி நாட்டார் 
61.அண்ணல் 
62.தோன்றல் 
63.கோலாயர் 
64. கோபாலர் 
65.விந்தர் 
66.தொண்டைமான் 
67.சிய்யான் (குல பெரியவரை குறிக்கும் ) 
68.முனையதரையர் 
69.ரெட்டி 
70. காங்கேயன் அல்லது காங்கேயர்

Tuesday, 4 March 2014

வேளிர் (ஈழம்)

வேளிர் (ஈழம்)

வேளிர் ஆட்சி தமிழகத்தில் இருந்தது போலவே ஈழத்திலும் இருந்தது. இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூல்கள் மிகச் சில செய்திகளையே கூறினாலும் இலக்கையில் கிடைக்கும் 26 கல்வெட்டுகள் இவர்களை பற்றி நிரம்பவே சான்றுகளை தருகின்றன. இவர்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுகள், எழுத்துப் பொறிப்புகள் அனைத்தும் பெருங்கற்காலம் சார்ந்த மையங்களிலேயே கிடைப்பதால் இவர்கள் பெருங்கற்காலத்தில் இருந்தே இலங்கையில் வலிமையுடன் இருந்தனர் என்று கூறுவார் ப. புஷ்பரட்ணம் என்னும் இலங்கை ஆய்வாளர்.

கல்வெட்டுகளும் இலக்கியங்களும்

இலங்கை கல்வெட்டுகள் ஆய்வுகள் இவர்களை 'வேள்' எனக் குறிப்பிட்டுத் தலைவன் எனப் பொருள்படும் பெயர்களையும், கிராம அதிகாரி, குதிரை மேற்பார்வையாளன் என்ற பொருள் தரும் சொற்களையும் வேள் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றன. மகாவம்சம் இவர்கள் ஆண்ட நாட்டை வெளோசனபதாசு" எனக் குறிப்பிடுகிறது.[1]

இதனையும் பார்க்க

மூலம்

  • ப. புஷ்பரட்ணம் (2000). தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு. யாழ்பாணம். பக். 42 -59.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. Jump up Mahavamsa - 8: 69

வேளிர் (தமிழகம்)

வேளிர் (தமிழகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்.வேளிர்கள் யது குலத்தை சேர்ந்தவர்கள். [1] வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். வேள் என்னும் சொல் வேளாண்மையைக் குறிக்கும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும். [2] எனவே, இவர்களைக் கொடையாளிகள் என்றுகூடச் சொல்லலாம். சங்ககாலத்தில் இவர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள்.
சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.[3] அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,

பாண்டிநாட்டு வேளிர்கள்

  1. ஆய் ஆண்டிரன்
  2. பொதியிற் செல்வன் திதியன்
  3. பாரிவேள்
  4. இருங்கோவேள்

சோழநாட்டு வேளிர்கள்

  1. நெடுங்கை வேண்மான்
  2. நெடுவேளாதன்
  3. செல்லிக்கோமான் ஆதன் எழினி
  4. வாட்டாற்று எழினியாதன்
  5. அழுந்தூர்வேள் திதியன்
  6. வேளேவ்வி
  7. வீரைவேண்மான் வெளியன் தித்தன்
  8. நன்னன்சேய் நன்னன்
  9. பொருநன்

சேரநாட்டு வேளிர்கள்

  1. நெடுவேளாவி
  2. வேளாவிக் கோமான் பதுமன்
  3. வையாவிக் கோப்பெரும் பேகன்
  4. நன்னன் வேண்மான்
  5. வெளியன் வேண்மான் ஆய் எயினன்
  6. வெளிமான்
  7. எருமையூரன்

வேளிர் வாழ்ந்த இடங்கள்

  • முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம். [4] [5]
  • வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர். [6]
  • குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர். [7]
  • குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர். [8]

வேளிர் போர்கள்

Saturday, 1 March 2014

மாட்டுப் பொங்கலும் சிவகாமிப் பாட்டியும்


என்னடா பேராண்டி இந்த ஊர்.

எல்லாமே தலைகீழா இருக்கு. 

மாட்டுப் பொங்கல்னு சொல்றாய்ங்க மாட்டையே ஊரைவிட்டே ஓட்டிவிட்டு என்ன மாட்டுப் பொங்கல் கொண்டாடுவாய்ங்க. 

அதே மாதிரி காணும் பொங்கல்னா சுற்றத்தையும் சொந்த பந்தங்களையும் பாக்கனும். 

அதவிட்டுட்டு கடற்கரைன்னும் கள்ளுக்கடைன்னும் அலையுதுங்களே என்று சலித்துக்கொண்டார் சிவகாமிப் பாட்டி

சிவகாமிப் பாட்டி பாண்டி நாட்டுப் பெண்மணி.  பழனிக்கு அருகில் உள்ள ஆயக்குடி சொந்த ஊர்.  சங்க இலக்கியத்தில் ஆயக்குடி பற்றிய குறிப்பு இருப்பதாகப் பெருமையுடன் கூறுவார்.  அந்தப் பகுதியில் வாழும் குடிகள் பற்றிய தகவல் அனைத்தும் நன்கும் அறிந்தவர். எனவே அவரை மாட்டுப் பொங்கல் பற்றி ஏதாவது சொல்லட்டும் என்று வாயைக் கிளறினேன்

ஆயர்குலம் இருந்ததால் அந்த ஊர் ஆயக்குடி ஆனது. அவர்கள் எப்போது அங்கு குடியேறினார்கள் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு சரிந்திரச் சான்றுகள் இல்லை.  அவர்கள் வளர்த்த மாடுகளுக்கும் சிந்துவெளி மாடுகளுக்கும் உருவ ஒற்றுமை இருப்பது மறுக்க முடியாது என்றார்..

மாடுகளைப் பிடித்துக்கொண்டு மதுரை மண்ணில் முதலில் குடியேறியவர்கள் கன்னடம் பேசுபவர்கள். எனவே சிந்து வெளியில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் அவர்கள் கிழக்கில் குடியேறி இருக்கவேண்டும் என்பது சிவகாமிப்பாட்டியின் அனுமானம்.

.ஆயக்குடி வாசிகள் மாடுகளைக் குடும்பச் சொத்தாக வைத்திருந்தாலும் அவற்றைக் கும்பலாக மேய்ச்சல் நிலத்தில் மேயவிட்டு அதற்குக் காவல் காக்க ஆட்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் வளர்த்த மாடுகளில் பட்டத்து மாடான தம்பிரான் மாடு என்பதற்கு ஒரு தனி வரலாறே இருக்கிறது.என்று சொன்ன சிவகாமிப்பாட்டி  தம்பிரான் மாடு தெய்வத்தன்மை உடையதாகக் கருதி அவர்கள் வணங்கினார்கள் என்றும். பசு மாடுகளை அவர்கள் பால்கறக்க வணிக நோக்கத்தில் வளர்க்கவில்லை.  இன விருத்திக்காக மட்டுமே பசுமாடுகள் வளர்த்தார்கள் என்றும் சொன்னார்

தம்பிரான் மாட்டுக்கென்று ஒரு மரபு வழிவழியாக இருந்துவந்தது.  மற்ற மாடுகளிலும் தை ஒன்றாம் தேதி பிறக்கும் மாடுகளைக் கோவிலுக்கு நேர்ந்து விட்டுவிடுவார்கள் யாரும் அவற்றை வீட்டு மாடுகளாக வைத்து வேலை வாங்குவதில்லை. அந்தநாளில் பிறந்த மாடு இறைவனுக்கு உரியது என்று அவர்கள் கருதினர். பொதுவாக மாடுகள் இறந்தால் அவர்கள் அதைச் சக்கிலியனின் கத்திக்கு இரையாக்காமல் புதைக்கும் மரபு இருந்தது.

மாநிறைக்குத் தலைவனாக இருக்கும் மாட்டுக்கு பட்டத்து மாடு என்று பெயரிட்டு ஒரு மாடு இறந்தால் அதற்கு அடுத்த பட்டத்துக்கு இன்னொரு பட்டத்துமாட்டை மாடுகளே தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது.  இதற்கென மிகவும் செலவு பிடிக்கும் நடைமுறையைக் காலம் காலமாக ஆயக்குடி ஆயர்கள் கடைப்பிடித்து வந்தனர்.

புதிய பட்டத்துமாடு தேர்ந்தெடுக்க நாள் குறித்து எல்லா மாடுகளையும் பொது இடத்தில் கூட்டி சூடம் பத்தி வெற்றிலை பழம் வைத்துத் தேர்தலை நடத்துவார்கள்..  ஆராதனை முடிந்ததும் மாடுகளுக்கு முன்னால் ஒரு கரும்புக் கட்டை பட்டத்து மாட்டின் சேவகனான கப்பிலியான் வைப்பான்.  எந்தக் காளை மாடு முதலில் அடிஎடுத்து  வந்து கரும்புக்கட்டைச் சாப்பிடுகிறதோ அதுவே பட்டத்துமாடாகத் தேர்ந்தெடுக்கப்படும். குங்குமம் வைத்து மாலையிட்டு முறையான சடங்குகளை நடத்தி அந்தமாடு பட்டத்து மாடாக ஏற்றுக்கொள்ளப்படும். அந்தக் காளை தெய்வாம்சம் பொருந்தியதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நந்தகோபாலஸ்வாமி என்ற புனிதப்பெயரிட்டு அழைக்கப்படும். இந்த மாட்டைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள ஒரு கப்பிலியான் நியமிக்கப்பட்டு அவனுக்கென மானியமும் ஒதுக்கப்படும்.  நந்தகோபால ஸ்வாமிக்கு நகைகளும் தாமிரப் பட்டயங்களும் காலம்காலமாகக் காப்பிலியானால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஒரு கப்பிலியான் இறந்தால் இன்னொரு கப்பிலியான் நந்தகோபாலஸ்வாமி முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்படுவான்.  ஆநிறைகளை வெப்பகாலத்தில் மலைக்கு ஓட்டிச் செல்ல நந்தகோபாலஸ்வாமியின் முன் அனுமதி வேண்டும்.  நந்தகோபால ஸ்வாமி இறையருள் நிறைந்திருந்ததால் எல்லாப்புனித நிகழ்வுகளுக்கும் ஆசி வழங்குவது அவசியம்.

பொதுவாக மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள காலம்கடந்த உறவில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மாட்டுடன் சேர்ந்து பயன் பெற்றதில் நல்லதை எடுத்துக்கொண்டு அவனுக்கு வேண்டாததையே மாட்டுக்குக் கொடுத்து ஏமாற்றுவது வழக்கம்.  நெல்லைக் கதிரடித்தபின் நெல்லை அவன் எடுத்துக்கொண்டு வைக்கோலை மாட்டுக்குக் கொடுப்பதும் நெல்லை அரைத்து அரிசியை அவன் எடுத்துக்கொண்டு தவிட்டை மாட்டுக்குக் கொடுப்பதும் சோறாக்கி பருக்கையை அவன் எடுத்துக்கொண்டு கஞ்சியை மாட்டுக்குக் கொடுப்பதும் மற்ற ஊர்களில் வழக்கம்.  ஆனால் இங்கே பசுக்களும் காளைளும் ராஜ வாழ்க்கை வாழும்.  காராம் பசுவின் பால கன்றுக்குப் போகக் கொஞ்சம் பாலர்களுக்குக் கொடுப்பார்கள்.  பசுவின் பாலை விலைக்கு விற்பது பாவம் என்று கருதப்பட்டது.  காளைகளும் கண்ணும் கருத்துமாக பாசத்துடனும் பரிவுடனும் வளர்க்கப்பட்டன.

திருமணச் சீதனமாகக் கட்டாயம் ஒரு பசு இடம்பெறும்.  மந்திரம் ஓதும் மறையவர்களுக்குப் பசு தானமாக வழங்கப்பட்டது

அவ்வளவு சிறந்த ஆயர்குடியில் இருந்த பெண்கள் பலராமன் வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறப்பட்ட ஆயர்குடிப் பெண்கள் பாண்டிய அரச குடும்பத்துடன் திருமண உறவு கொண்டவர்கள்.  அந்தத் திருமண உறவு காரணமாகவே பாண்டியர் பூமியான திருநெல்வேலியிலும் ஒரு ஆய்குடி உள்ளது.  ஆய் மன்னர்கள் பான்டியர்களுக்கு உறுதுனையாக இருந்ததற்கு இந்தத் திருமண உறவே காரணம்.என்று குறிப்பிட்டார்

உன் ஊர் சாதாரணமான ஊர் அல்ல நீங்கள் எல்லாம் பலராமர் வழித் தோன்றல்கள். மாட்டுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு சங்க காலத்துக்கும் முற்பட்டது.  எங்கள் காலத்தில் இருந்த மாடுகள் குடும்பத்தில் இரண்டறக் கலந்து வாழ்ந்தன. ஆட்டை அடித்து மாட்டை அடிக்கும் மனிதன் அப்போது அவன் கோர முகத்தைக் காட்டவில்லை.  பசுக்கள் பால் வணிகத்துக்கும் களைகள் மாட்டிறைச்சிக்கும் பயன்படுத்தாத காலம். இப்போதெல்லாம் சீமைப் பசுமாடுகள் என்று மடியைத் தூக்க முடியாமல் அலையும் பத்தி லிட்டர் பாலைக் கொடுத்து வாழ்க்கையெல்லாம் அடிமையாக வாழ்ந்து வயதானால் மாட்டுத் தொட்டியில் மண்டை உடைந்து மனிதனுக்கு உணவாகிவிடுகிறது.  எங்க காலத்தில் மாடில்லாமல் எந்தப் புனித நிகழ்வும் நடக்காது.  பொங்கலைக் கொண்டாடும்போது மாடுகளின் தோழமையை மனதார நினைத்துப் போற்றவே மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது என்று கூறி முடித்தார் சிவகாமிப்பாட்டி

நாகராஜன்  வடிவேல்

தொண்டைமான்கள் யார்?


தொண்டைமண்டலத்தை  24 கோட்டங்களாகப் பிரித்து குறும்ப இடையர் என்ற யாதவ  மரபினரே ஆண்டு வந்தார்கள் இவர்களே பல்லவர் எனப்பட்டனர். பிற்காலத்தில்  வலிமை குன்றி இராமநாதபுரத்துக்கு கட்டுப்பட்டு  புதுகோட்டையை ஆண்டு வந்தனர்

கி.பி. 1671-1710 முதல் இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி அதுசமயம்  புதுகோட்டை மன்னராக  இருந்த பல்லவராயன் என்பவரை நீக்கிவிட்டு, அதற்க்குப் பதில் தனது ஆசை நாயகியான கள்ளர் இனது நங்கை காத் ஆய் என்பவளின் சகோதரர் ரகுநாதன் என்பவனை புதுகோட்டை மன்னராக்கினார். இவரே தொண்டைமான் என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். எனவே ஆதியில் புதுகோட்டை தொண்டைமான்கள் யாதவர்கள் என்பது தெளிவாகிறது.

NOTE: 

In ancient times a nomadic shepard class abandoned it's wanderings and settled around kanchi and it's neighbourhood, destroyed the forests, converted them into fertile lands, made many adminstrative divisions or kottam's. from this sheppard class or kurumbas emerged great pallavas 

-Views of elliot sevol 

ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். குறும்பர் ஆடுமாடுகளை மேய்ப்பவர். இதனைக் கருத்திற் கொண்டு. பால்-அவர் (பால் கறப்பவர் - குறும்பர்) என்பதே பல்லவர் எனத் திரிந்திருக்கலாம் என முடிவு செய்தவரும் சிலராவர்.

மணிமேகலையில் கூறப்படும் ஆதொண்டச்சக்கரவர்த்தி குறும்பரை வென்று அவர் தம் குறும்பர் பூமியைத் தனதாக்கி தன் பெயர் இட்டு தொண்டைமண்டலம் என வழங்கினான்' என்பது செவிவழி வரும் செய்தியாகும். இது முன்னரே கூறப்பட்டது

யாதவர்களுக்கு குறும்பொறை நாடன்  என்ற பட்டமும் உள்ளது. குறும்பு என்றால் காடு என்று பொருள். காடும் காடு சார்ந்த பகுதில் வாழ்ந்த முல்லை நில மக்களான குறும்ப இடையர் பிற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வழியாக  ஆந்திரா கர்நாடக போன்ற பகுதிக்கு சென்று வாழ்ந்தனர்.

நன்றி
சுபாஷ் சேர்வை யாதவ்

யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா? இதுதான் விவாதப்பொருள்.


வேறொரு ஆங்கில மடற்குழுவில் நடைபெறும் விவாதம் ஒன்று
கருத்தைக் கவர்ந்தது.
யாதவர் என்ற அரச வமசத்தினர் மதுராவிலும் பின்னர்
துவாரகையிலும் ஆண்டனர். மகாபாரதப்போர் முடிந்து தர்மர்
அசுவமேத யாகம் செய்தபின்னர் சில காலம் கழித்து, ஒரு
ரிஷியின் சாபத்தால் யாதவர்கள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டனர்.
அத்துடன் துவாரகையும் கடலுள் மூழ்கியது.
அத்துடன் யாதவர்கள் எல்லாருமே அழிந்துவிட்டனரா?
இதுதான் விவாதப்பொருள்.

Dynastic Drift என்றொரு சமாச்சாரம் உண்டு. ஓர் அரச பரம்பரை
காலப்போக்கில் ஒவ்வொரு இடமாக பெயர்ந்து, தாம் ஆரம்பித்த
இடத்திலிருந்து வெகுதூரம் வந்துவிடும்.
வாணர்கள், பல்லவர்கள், சகர்கள், குஷானர்கள், ஹூணர்கள்,
மாங்கோலியர்கள் போன்றோர் அவ்வாறு பல மைல்கள் கடந்து
சென்றவர்கள்.
பல்லவர்கள் வெளிநாட்டினர் என்று பல அறிஞர்கள்
கருதுகின்றனர். இரானியர்களாக இருக்கலாம் என்ற கருத்தே
வலுவாக இருக்கிறது.
அவர்கள் கிருஸ்துவ சகாப்த்தத்தின் ஆரம்பத்தில் மத்திய
இந்தியாவிலிருந்த சாதவாஹனர்களின் கீழ் அரசு அதிகாரிகளாக
விளங்கினர்.
சில நூற்றாண்டுகளில் அவர்கள் ஆந்திராவின் தென் பகுதிகளில்
இருந்தனர். பின்னர் தொண்டை மண்டலத்தின் வட பகுதி. அதன்
பின்னர் தொண்டை மண்டலம் முழுவதும். பின்னர் வட தமிழகத்தில் -
சோழநாடு உட்பட அவர்கள் ஆட்சி நிலவியது.
பல்லவர்களின் சில கிளை மரபினர் தென் கிழக்காசியாவிலும்
தங்கள் அரசை நிறுவினர்.
இதுபோலவே வாணர்களும் வெளிநாட்டு ஆட்கள்தாம். அவர்களும்
ஆங்காங்கு பெயர்ந்து பெயர்ந்து தமிழகம்வந்துசேர்ந்தனர். ஒரு
காலகட்டத்தில் பாண்டியர்களை மதுரையிலிருந்து விரட்டிவிட்டு
அவர்களே மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

யாதவர்களின் கிளை மரபினரும் அதுபோலவே வேற்றிடங்களுக்குப்
பரவினர்.
இதுபற்றிப் புறநானூற்றுப் பாடலொன்றும்இருக்கின்றது.

'செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை
உவராவீகைத் துவரையாண்ட
நாற்பத்தொன்பதின் வழிமுறை வந்த
வேளிருள் வேளே!'

இருக்குவேள் என்பவனைப் பற்றி கபிலர் பாடியது. அவர்
வாழ்ந்தது கி. பி. 2-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
துவாரகையிலிருந்து வந்த பதினெண்மர் கொண்ட வேளிர்
கூட்டத்தின் நாற்பத்தொன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவன்,
அந்த இருக்குவேள்.
அவர்கள் யது குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் தொடர்பு கொண்டவர்கள் தாம் ஹொய்சாளர்,
சாளுக்கியர் முதலியவர்.
யௌதேயர் என்னும் அரச மரபும் இருந்திருக்கிறது.